
N. Asokan, aka eḻuttukkiṉiyavaṉ, is a professor (of computer science) passionate about writing, language, and literature. His English translations of stories by leading Sri Lankan Tamil writers have been selected for publication in venues like Copper Nickel, Lunch Ticket, and Jaffna Monitor. One of these was a finalist for the Gabo Prize for Literature in Translation & Multilingual Texts. His Tamil translations have appeared in Tamil literary magazines like andhimazhai, amrutha, kālaccuvaṭu, uyirmai, vīrakēcari Weekend Edition, taṭāri, and vallinam
Occasionally he also writes his own stories and poetry.
If you are curious about his real profession, check the “About Me” page on my professional website.
எழுத்துக்கினியவன் என்ற புனைபெயரில் எழுதும் ந. அசோகன், மொழி, இலக்கியம், எழுத்துகளில் ஆர்வங்கொண்ட ஒரு (கணினியல்) பேராசிரியர். அவரது ஆங்கில மொழியாக்கங்கள் Copper Nickel, Lunch Ticket, Jaffna Monitor போன்ற இதழ்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவரது தமிழாக்கங்கள் அந்திமழை, அம்ருதா, உயிர்மை, காலச்சுவடு, வீரகேசரி வார இதழ், தடாரி, வல்லினம் போன்ற இலக்கியப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டுள்ளன. இவரது ஆங்கில மொழியாக்கமொன்று மொழியாக்கத்துக்கான காபோ பரிசுத் தேர்வின் இறுதிநிலைப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அவரது தொழில் பற்றி அறிய ஆவல் இருந்தால் தொழில்சார்ந்த அறிமுகப் பக்கத்தைப் பாருங்கள்.
What I translate and why?
I began translating Sri Lankan Tamil short stories into English because I felt that a significant proportion of the second-generation Sri Lankan Tamil kids growing up in the diaspora are unable to read in Tamil even though they are otherwise familiar with the Sri Lankan Tamil culture. As a result the entire world of Sri Lankan Tamil literature is largely inaccessible to them. I thought that by translating stories that described the milieu of a bygone world in which their parents and grandparents grew up, I would be nudging open the door for these kids to a glimpse of that inaccessible world. I began by translating the likes of Appadurai Muttulingam, whose village my mother, too, hailed from and Kuppilan Ai. Shanmugan, who was from my father’s village. I then moved on to writers like Shobasakthi who is the foremost writer from my generation, the first generation to come of age during the Sri Lankan civil war.
I then realized that these translations can hold the door open not only to the kids in the Tamil diaspora but also for communities to understand one another despite language barriers. This is why I started translating the stories of the inimitable S.L.M. Hanifa, who writes about the Eastern Muslim way of life.
This interview, among other topics, also touches on what I translate and why.
Translation needs more than fluency in both the source and target language. It requires the translator to understand the context in which the story is set in order to capture the original author’s intent. Even though I was not formally trained as a translator, I feel that there are stories where I can bring my lived experience to help me interpret this context. This is why I translate Sri Lankan Tamil stories, or science fiction (as a teenager struggling to learn English, I devoured Arthur C. Clarke and Isaac Asimov and the like). Having lived in Finland for two decades, I am also very keen to translate Nordic children’s writers into Tamil (if I manage to find a willing publisher!). In each of these cases, I feel that the trajectory of my life allows me to deeply understand the subtleties and nuances in these stories.
என் மொழியாக்கங்கள் பற்றி
புலத்தில் வளரும் இரண்டாம் தலைமுறை இளைஞர் பலருக்குத் தமிழ்ப்பண்பாட்டைப் பற்றி நன்கு தெரிந்திருந்தாலும் தமிழில் படிக்க முடியவில்லை. ஆகவே தமிழ் இலக்கிய உலகம் அவர்களுக்கு மூடப் பட்டுள்ளது. இலங்கைத் தமிழ்க் கதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்குவதால் அந்த மறைந்து போகும் அவர்களின் மூதாதையரின் உலகத்தைக் கொஞ்சமாவது அவர்களுக்குத் திறந்து காட்டலாம் என நினைத்தேன். ஆரம்பத்தில் எனது தாயாரின் கிராமத்தைச் சேர்ந்த அ. முத்துலிங்கம் மற்றும் எனது தந்தையின் ஊரில் பிறந்து வளர்ந்த குப்பிளான் ஐ. சண்முகன் ஆகியோரின் கதைகளை மொழியாக்கினேன். பிறகு போர்க் காலத்தில் வயதுக்கு வந்த முதலாவது தலைமுறையான என் தலைமுறையின் தலை சிறந்த எழுத்தாளன ஷோபாசக்தியின் கதைகளையும் மொழியாக்க ஆரம்பித்தேன்.
இத்தகைய மொழியாக்கங்கள் புலத்தில் வளரும் இளைய தலைமுறைக்கு மட்டுமல்ல சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கு வழிகோலவும் உதவலாம். ஆகவே கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களின் கதை சொல்லும் எஸ். எல். எம். ஹனிபாவின் கதைகளையும் மொழியாக்க முனைந்தேன்.
மொழியாக்கத்துக்கு மொழிகளில் சரளம் மட்டும் இருந்தால் போதாது. மூல எழுத்தாளரின் நோக்கத்தைச் சரியாக வடிப்பதற்கு அந்தக் கதையின் தாற்பரியத்தைப் பற்றியும் இருப்பைப் பற்றியும் ஒரு சரியான புரிந்துணர்வு மொழியாக்குபவருக்கு இருக்க வேண்டும். நான் ஒரு தொழில்ரீதியான மொழியாக்கம் செய்பவன் அல்ல என்றாலும், இலங்கைத் தமிழ்க் கதைகளை மொழியாக்க விளைந்ததற்குக் காரணம் இதுதான். அது போலவே பதின்ம வயதுகளில் ஆங்கிலம் படிப்பதற்காக கையில் கிடைத்த விஞ்ஞானக் கதைகளைப் பஸ்மீகரம் செய்த அனுபவம் (ஆர்தர் சீ. கிளார்க், ஐசாக் அசிமோவ் போன்றவர்களது கதைகள்), விஞ்ஞானக் கதைகளை மொழியாக்க உதவுகின்றன. பின்லாந்தில் இருபது வருடம் வாழ்ந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு வட ஐரோப்பியச் சிறுவர் கதைகளைத் தமிழாக்கவும் விரும்புகிறேன் (ஒரு பதிப்பாளரைக் கண்டு பிடித்தால்!). இத்தகைய மொழியாக்கங்களைச் செய்வதற்குத் தேவையான புரிந்துணர்வை எனது வாழ்க்கை அனுபவம் தருகிறது என நம்புகிறேன்.
What’s in a pen-name? / புனைபெயர் பற்றி
Pronunciation
IPA: /eɻut̪t̪ukkinijavan/
An almost correct attempt at pronunciation:
“… as a child, I loved to write. I wanted to become a writer when I grew up. I wrote all the time. Inspired by the name of a character in a historical novel, kaṇṇukkiṉiyāḷ (meaning “[she who is] sweet on the eyes”), I chose myself a pen name, eḻuttukkiṉiyavaṉ (meaning “[he who is] sweet to writing”).”
From: Gifts
“… நான் சிறுவனாக இருந்தபோது எழுதுவது என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். “கண்ணுக்கினியாள்” என்ற ஒரு சரித்திர நாவலின் கதாபாத்திரத்தின் பெயரால் ஈர்க்கப்பட்டு, எனக்கு “எழுத்துக்கினியவன்” என்ற புனைபெயரைத் தேர்ந்தெடுத்தேன்.
மூலம்: அன்பளிப்புகள்