
The scent of Jasmin in the air;
Long, plaited jet black hair;
A wizened face in a content smile;
Memories of that sunny isle;
Melodies wafting from a flute;
Gently goading a Sun to boot;
The fire burning within my chest,
Pedalling towards the hill that is next;
The silent lake; the shadow of a tree;
Ducklings behind their mother, carefree;
Lashing waves, the roar of the seas;
Niagara, the mighty falls,
Humbles, teaches, and enthralls…
Little things bring joy to me.
If only she would write to me,
More joy it would surely be,
Than these could altogether be!
June 1992

காற்றினில் மல்லிகை கமழ்ந்து வருதல்;
கறுத்து நீண்ட கூந்தற் பின்னல்;
பழுத்த முகத்தின் பொக்கைச் சிரிப்பு:
இலங்கைத் தீவின் இனிய நினைவுகள்;
புல்லாங்குழலின் பொங்கும் நாதம்;
முரண்ட பொறியை மெல்லப் பணித்தல்;
அடுத்த குன்றில் ஏறவே மிதிக்க,
நெஞ்சினில் தோன்றும் நெருப்புக் கனல்:
அசைவற்ற குளம்; அருகினில் மரநிழல்;
தாயைத் தொடரும் தாராக்குஞ்சுகள்;
மோதும் அலை; முழங்கும் கடல்;
மின்னல், இடி, மரங்களின் நர்த்தனம்;
பயந்து பணிந்து, பரத்தையே அறியப்
பண்ணிடும் அந்தப் பெரு நீர்வீழ்ச்சி…
சிறிய நிகழ்வுகள் சிரிக்க வைப்பன.
இவைகளெல்லாம் ஒருமித் தளித்த
மகிழ்வினும் மகிழ்வேன் — மடலொன்றெழுத
மங்கை அவள் மனம் வைத்திட்டால்!
ஆனி 1992




Leave a Reply