
In this north beyond north,
Where the sun struggles even to climb barely above the horizon,
Where it is still rather chilly in the shade even at mid morning,
When the golden sunlight washes over you,
Like a warm embrace,
Not yet hot, but just right,
Surrounded by nothing but the gentle sounds,
Of waves lapping at the shore,
Of birds tweeting busily;
That brief moment,
Is not for longing wistfully at what might have been,
But for embracing the sun’s warmth,
With gratitude for what is.
வடக்குக்கும் மேலான வடக்கில்,
அடிவானத்தை விட்டுக் கொஞ்சம் ஏறவே தடுமாறும் சூரியன்.
நடுக்காலையில் கூட நிழலுக்குள் நின்றால் சில்லிடும் நேரம்.
கரைமோதும் அலைகளையும், கீச்சிடும் குருவிகளையும்
அல்லாத வேறெந்த ஒலியுமே இல்லாத நேரம்.
பொன்னிற வெயில் மெய்தழுவி ஓடும்,
ஒரு இதமான அணைப்புப் போல,
அளவுக்கு மிஞ்சாத மிதமான சூட்டோடு.
அந்தச் சிறு தருணம்,
’அப்படியெல்லாம் நடந்திருந்தால்’ என்று ஏங்கித் தவிப்பதற்கல்ல.
கதிரவன் அணைப்பை மனமார அனுபவித்து,
நடந்தவைக்கெல்லாம் நன்றி கூர்வதற்கே!



Leave a Reply