Image courtesy: https://commons.wikimedia.org/wiki/File:Tamil_Tiger_women_at_war.jpg

கல்லுத் தூக்குவியோ? குண்டு பொருத்துவியோ?
 கொல்லும் துவக்கைக் கழட்டிப் பூட்டுவியோ?
 செல்லத் தங்கச்சீ! செருக்குக் கொள்வேனோ?
 அல்ல உனையெண்ணி அல்லற் படுவேனோ?
 
 பள்ளி யால்வந்து படியேற முன்னால்
 அள்ளி அம்மாவை அணைத்து அவளிடத்தில்
 செல்லக் கதைபேசிச் சேலைத் தலைப்பினிலே
 மெல்ல முகம்புதைத்து முனகிச் சிணுங்காமல்
 
 உண்ணவும் மாட்டாய், உறங்கவும் மாட்டாய்.
 எண்ணப் பொறுக்குதில்லை என்னருமைத் தங்கச்சீ!
 என்ன செய்வாயோ? எவரை அணைப்பாயோ?
 பொன்னாய் வைத்திருந்தோம், போனாய் உதறிவிட்டு.
 
 எண்ணும்போது கொஞ்சம் இறுமாப்பும் வருகுது;
 தன்னலமே தலைகொண்டு தப்பிச்சனம் ஓடுகையில்
 எண்ணிச் சரியென எடுத்த வழியினில்
 திண்ணிய நெஞ்சுடன் போனாளென் தங்கச்சி!
 
 எண்ணும்போது இங்கே ஏக்கமும் பெருகுது:
 சின்னக் கையாலே செக்கிழுக்க நோகாதோ?
 வன்னிக் காட்டினிலே வல்லை வெளியினிலே
 என்ன அபாயமோ? எத்தனை ஆபத்தோ?

ஆடி 1992

My little sister
 Can take apart an AK-47
 And put it back together
 With a burning passion.
 
 As the sun sinks
 Into the bloody lagoon
 My sister watches over
 Her weary wounded comrades.
 
 The elusive dawn’s rays
 Struggle to reach the treetops,
 My sister is on her trek
 Towards the next ambush.
 
 Would I brim with pride,
 My dear dear little sister?
 Or thinking of you,
 Would I weep like a child?
 
 What dangers lurk,
 In those scrawny jungles?
 What demons lie in waiting?
 What hand would wipe your tears?
 What bosom would you nestle up to?
 
 My little sister
 Can take apart an AK-47.
 Who took apart her life?
 
 My little sister
 Can put it back together.
 Who would bring about
 That elusive dawn to her?

July 1992

  • 17 July 1992

Leave a Reply

Trending

Discover more from eLuttukku / எழுத்துக்கு

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading