
I sit still… Screaming without noise;
My whole body inert as lead.
I can see the house,
the lone candle fighting darkness.
I can see the silent figures,
tired of terror but still hoping.
I can feel the terrible wait,
for the gate’s creak and their arrival.
Or will it be a round of fire?
Or a wave of screams?
They come, they undo, they go.
I can sense the rising emotions;
Despair, frustration, revenge, determination…
LOSS.
I can see the look in your eyes;
I shudder from head to toe.
Yet,
I sit still.
A thousand miles of sheer space..
I cannot but sit still.
I wish I could sit by your side;
I wish I could steal you and fly away;
Oh…I wish I loved you less.
I cannot but sit still.
Or…can I?
-October 1985
அறையின் இருண்ட மூலையில்
அசைவேதுமின்றி நான்.
இரும்பாய்க் கனக்கிற இதயம்
ஓசையில்லாது அலற
அசைவேதுமின்றி நான்.
இருண்ட வீடு தெரிகிறது.
இருளைக் கிழிக்க முயன்று துவளும் ஒற்றை விளக்கு.
மௌன உருவங்கள் தெரிகின்றன;
பீதி, களைப்பு.. இருந்தும் ஒரு நம்பிக்கைக் கீற்று.
கிரீச்சிடும் வாசற்படலைக்காய் — “அவர்கள்” வருகைக்காய்க்
காத்திருக்கும் அவலம் புரிகிறது.
அவர்களின் வருகை…
எப்போ ஆரம்பிக்கும்?
ஒரு சுற்றுத் தீர்ந்து ஓயும் இயந்திரத் துப்பாக்கியுடனா?
உறைய வைக்கும் ஓலங்களுடனா?
ஆடி அடங்கி அவர்கள் சென்ற பின்
ஆர்த்தெழும் உணர்வுகள் புரிகின்றன.
சோகம், ஆனால், விரக்தி, உறுதி…இழப்பு.
உன் கண்ணின் கோலம் தெரிகிறது.
உச்சி முதல் அடி வரை நடுக்கம் சேர்கிறது.
இருந்தும்
அசைவேதுமின்றி நான்.
ஆயிரம் மைல்களுக்கு வெறும் சூனிய வெளி.
ஆடாது அசையாது இருக்க மட்டுமே என்னால் முடியும்.
உன்னருகில் நானிருக்க வேண்டும்.
உன்னை அப்படியே கவர்ந்து வர வேண்டும்.
ஓ.. நான் உன்னை இவ்வளவு நேசித்திருக்கக் கூடாது!
ஆடாது அசையாது இருக்க மட்டுமே என்னால் முடியும்.
அல்லது… வேறேதும் முடியுமா?
-புரட்டாதி 1985
பிற்குறிப்பு: ஆங்கில மூலம் எழுதியது நான். ஆனால், இந்தத் தமிழாக்கம் செய்ததும் கவித்துவமான தலைப்பைத் தெரிந்தெடுத்ததும், எனது நண்பன் ச. ம.




Leave a Reply